ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹார்ட் பீட் 3: ரீனாவும் அர்ஜுனும் ஒன்று சேர்கிறார்களா?

ஹார்ட் பீட் 3 இணையத் தொடர் கதையில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் குறித்து...

heart beat

ஹார்ட் பீட் 3 காட்சி - படம்: எக்ஸ்

Published On :13 ஆகஸ்ட் 2026, 6:15 pm IST

ஹார்ட் பீட் 3 இணையத் தொடர் கதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் ஹார்ட் பீட் தொடரின் மூன்றாவது பாகம் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் நான்கு எபிசோடுகள் வெளியாகிறது.

முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, மோகன் ராம், அஸ்வதி, சபரிஷ் உள்ளிட்டோரும் புதிதாக ராகுல் ராஜசேகரன், காயுஸ்ரீ, அக்‌ஷதா தாஸ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

தொடரின் கதையின் படி, தந்தை மகளான கார்த்திக் குமார் மற்றும் தீபா பாலு இருவரும் பெங்களூரில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார். தீபா பாலுவின்(ரீனா) முன்னாள் காதலன் சாருகேஷ்(அர்ஜுன்), கல்லூரிப் படிப்பைத் தொடர்கிறார்.

இந்த நிலையில், ரீனாவிடம் கதிரும், அர்ஜுனிடம் மதுவும் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், ரீனா மற்றும் அர்ஜுன் தங்களுக்குள் இருந்த முன்னாள் காதலைத் தெரிவிக்கிறார்கள்.

இந்தச் சூழலில், மது, அர்ஜுனிடம் பழைய காதலுக்கு நல்ல முடிவுரை வழங்க, ரீனாவிடம் கேட்க வற்புறுத்துகிறார். அர்ஜுன், ரீனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டுப் பேசுகிறார்.

இதனால், இருவருக்கும் இடையிலான காதல் மீண்டும் மலரும் என்றே கூறப்படுகிறது. பின்னர் என்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடுகளில் தெரிந்துகொள்ளலாம்.

Summary

A sudden twist has occurred in the web series Heartbeat 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.