ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓடிடியில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய டாப் 10 படங்கள்!

ஓடிடியில் குடும்பத்தோடு காண வேண்டிய திரைப்படங்கள் குறித்து....

family

ஓடிடியில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படங்கள்! - படம்: எக்ஸ்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:02 pm IST

ஓடிடி தளங்களில் குடும்பத்தோடு காண வேண்டிய திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1குடும்பஸ்தன்

Listicle image

ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் தன் குறைவான மாத வருமானத்தில் குடும்பத்தை எப்படி வழிநடத்துகிறார் என்பதையும் வேலைக்குச் செல்லும் ஆண்களின் கசப்பான பக்கங்களையும் இப்படம் பேசியது.

2டூரிஸ்ட் ஃபேமிலி

Listicle image

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

இப்படத்தில் சசிகுமாருடன் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம்.

3குட் நைட்

Listicle image

குறட்டைப் பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு திரைக்கு வந்த குட் நைட் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.

மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். 'முதல் நீ முடியும் நீ' பிரபலம் மேத்தி ரகுநாத் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள் என்ற பக்ஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் ரேச்சல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

4சர்வம் மாயா

Listicle image

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான சர்வம் மாயா திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் அஜு வர்கீஸ், ரியா ஷிபு நடித்துள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி ஆகிய 7 மொழிகளில் பார்க்கலாம்.

5நூறு சாமி

Listicle image

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, இயக்குநர் சசியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நூறு சாமி.

முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திக்‌ஷன், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டது. இந்தப் படத்தை ஜீ5 ஓடிடியில் கண்டுகளிக்கலாம்.

6டாடா

Listicle image

ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் டாடா.

கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

7குருவாயூர் அம்பலநடையில்

Listicle image

விபின் தாஸ் இயக்கிய குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தில் பிருத்விராஜ், பாசில் ஜோசப் ஜோசப், நிகிலா விமல் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.

8மஞ்ஞுமல் பாய்ஸ்

Listicle image

பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

9மாமன்

Listicle image

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியான படம் மாமன்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

10தலைவன் தலைவி

Listicle image

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி.

இந்தப் படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Summary

Let us take a look at the movies available on OTT platforms that are suitable for watching with the family.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.