ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம்!

டிசி படத்தின் வசூல் நிலவரம் பற்றி...

டிசி போஸ்டர்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:35 pm IST

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமான படம் 'டிசி’. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 7) திரையரங்குகளில் வெளியானது. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனிருத் இசை இப்படத்தின் ஆல்பம் வெளியானபோதே பெரிதும் பேசப்பட்ட நிலையில், படத்தில் அவருடைய பங்களிப்பு ஆக்‌ஷன் காட்சிகளைகூட மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் மாற்றியுள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் நடிப்பும் அனைவராலும் பாரட்டப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

முதல் 4 நாள்களில் டிசி திரைப்படம் ரூ. 26 கோடி வரை வசூலித்துள்ளது. படத்தின் நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் டிசி திரைப்படம் மேலும் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Summary

Box office status of the film 'DC' starring Lokesh Kanagaraj!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.