ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறப்பான கிளைமேக்ஸ்... வினோதினி தொடர் 367 நாள்களுடன் நிறைவு!

வினோதினி தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...

serial

வினோதினி தொடர். - படம்: விடியோ கிளிப்

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:03 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வினோதினி தொடர், 367 நாள்களுடன் நிறைவடைந்தது.

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காரணிகளை எதிர்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற வினோதினி எவ்வாறு போராடுகிறாள் என்பதை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

ராணுவத்தில் பணிபுரியும் வினோதினியின் கணவர் விபத்தில் காணாமல்போன நிலையில், கணவரின் குடும்பத்தை கவனித்துக் கொண்டு, வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை இந்தத் தொடரின் கதை.

இந்தத் தொடரில், கார்த்திகை தீபம் தொடர் பிரபலம் நடிகை ஆர்த்திகா பிரதான பாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், இந்தத் தொடரில் கிருஷ்ணா, சல்மா, அப்சர், அரவிந்த் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.

வினோதினி தொடரின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்தத் தொடரின் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பானது.

நடிகை ஆர்த்திகா, அப்சரை திருமணம் செய்துகொள்வது காட்சி அமைக்கப்பட்டு தொடர் முடிவுற்றது. இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் விறுவிறுப்புடனும் சிறப்பாகவும் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்தது, தொடரை விரும்பிப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வினோதினி தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இன்று முதல் புது வசந்தம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

The serial Vinodhini, which aired on Sun TV, concluded after a run of 367 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.