ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திடீர் திருப்பம்! ஹார்ட் பீட் - 3 தொடரில் விஜய் சேதுபதி பட நாயகி!

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரில் நடிகை காயத்ரி இணைந்துள்ளது குறித்து...

heart beat 3

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரில் நடிகை காயத்ரி. - படம்: ஜியோ ஹாட் ஸ்டார்

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:40 pm IST

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரில் விஜய் சேதுபதி பட நாயகி நடிகை காயத்ரி சங்கர் இணைந்துள்ளார்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் ஹார்ட் பீட் தொடரின் மூன்றாவது பாகம் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் நான்கு எபிசோடுகள் வெளியாகிறது.

முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, மோகன் ராம், அஸ்வதி, சபரிஷ் உள்ளிட்டோரும் புதிதாக ராகுல் ராஜசேகரன், காயுஸ்ரீ உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், ஹார்ட் பீட் தொடரில் திடீர் திருப்பமாக, நடிகை காயத்ரி சங்கர் புதிய பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

தொடரின் கதையின் படி, கார்த்திக் குமார் மற்றும் தீபா பாலு இருவரும் பெங்களூரில் தங்கி வேலைப் பார்த்து வரும் நிலையில், தீபா பாலு தனது தந்தை கார்த்திக் குமாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இந்தச் சூழலில் நடிகை காயத்ரி, அவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் மேல் தளத்தில் குடியேறுகிறார். காயத்ரியின் வருகை தொடரில் ஸ்வாரசியத்தைக் கூட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் கார்த்திக் குமார் - காயத்ரியின் காதல் காட்சிகள் இடம்பெறும்.

விஜய் சேதுபதி பட நாயகி காயத்ரி சங்கர்!

18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி சங்கர். இவர் விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து, ரம்மி, சீதக்காதி, சித்திரம் பேசுதடி - 2, விக்ரம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, ஹாட் பீட் இணையத் தொடரின் மூன்றாம் பாகத்தில் இணைந்துள்ளார் நடிகை காயத்ரி.

Summary

Actress Gayathrie Shankar, known for starring alongside Vijay Sethupathi, has joined the web series Heart Beat 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.