ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வரவேற்பைப் பெறும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்!

மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி...

Master Plan movie First Look

‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்

Published On :7 ஆகஸ்ட் 2026, 6:43 pm IST

‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘மாஸ்டர் பிளான்’. தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். K.S. பழனி ஒளிப்பதிவை கவனிக்க, A.J. அலி மிர்சாக் படத்துக்கு இசையமைக்கிறார். உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து படத்தை தயாரிக்கிறது.

தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்னைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.