ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒழுக்கம் விழுப்பம்... சாக்‌ஷி அகர்வாலை விமர்சிக்கும் ரசிகர்கள்!

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் திருக்குறள் பதிவுக்கு ரசிகர்கள் விமர்சனம்...

நடிகை சாக்‌ஷி அகர்வால்

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

நடிகை சாக்‌ஷி அகர்வால் பதிவிட்ட திருக்குறளால் அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாக்‌ஷி அகர்வால். திரைப்படங்களில் குறைவாக நடித்தாலும் விளம்பரங்கள் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அவருக்கான ரசிகர்களும் இருக்கின்றனர். அண்மையில், புதிதாக தொழில் ஒன்றையும் தொடங்கினார்.

இந்த நிலையில், பெண்களை அவமதிக்கும் விதமாகப் பேசியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கதை செய்யப்பட்டபோது நடிகை நிவேதா பெத்துராஜ்,

”புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கம் தரும்” என்கிற திருக்குறளைப் பதிவிட்டார். இது பேசுபொருளானது.இதற்காக, ஆதரவாகவும் எதிரகாகவும் விமர்சனங்களையும் சந்தித்தார்.

அதேநேரம், நடிகை சாக்‌ஷி அகர்வாலும் தன் எக்ஸ் பக்கத்தில்,

“ஒழுக்கம் விழுப்பம் தரலான்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்." என்கிற திருக்குறளைப் பதிவு செய்தார்.

இவரும் மறைமுமாக கருத்து சொன்னதால் சிலர் அதனை வரவேற்றாலும் இன்னும் சிலர் தொடர்ச்சியாக கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடும் நீங்கள் ஒழுக்கம் பற்றி பேசலாமா? என சாக்‌ஷியை விமர்சித்தும் வருகின்றனர்.

actress Sakshi Agarwal over a Thirukkural verse she posted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.