ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ப்ரோ கோட் திரைப்படத்தின் பெயர் ப்ரோ கிளப் ஆனது!

ரவி மோகனின் ப்ரோ கோட் திரைப்படப் பெயர் மாற்றம்...

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:42 pm IST

நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் ப்ரோ கோட் திரைப்படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன் தயாரித்து நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகின்றார். இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, “ப்ரோ கோட்” எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெயரின் உரிமம் தங்களுடையது எனக் கோரி தில்லியைச் சேர்ந்த பிரபல மதுபான நிறுவனம் ஒன்று வழக்குத் தொடர்ந்தது.

இதனைத் தொடர்ந்து, ஒரே பெயரை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது விதிமீறலாகத் தெரிவதாகக் கூறிய தில்லி உயர் நீதிமன்றம் வழக்கு முடியும் வரையில் திரைப்படத்தின் விளம்பரங்கள் மற்றும் வெளியீட்டிற்கு ப்ரோ கோட் என்ற பெயரைப் பயன்படுத்த தடை விதித்தது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் ரவி மோகன், “ப்ரோ கோட் திரைப்படத்தின் பெயரை ப்ரோ கிளப் (bro club) எனப் பெயரிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். மூன்று நண்பர்களின் திருமண வாழ்வில் நடக்கும் ஜாலியான கதையாக இது உருவாகி வருகிறது.

The title of the film bro Code, produced by actor Ravi Mohan, has been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.