ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கவின் படத்தில் காவ்யா அறிவுமணி! சிறப்பு போஸ்டர் வெளியீடு!

நடிகர் கவினின் புதிய படத்தில், பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் காவ்யா அறிவுமணி நடித்துள்ளது குறித்து...

Kavin Nayanthara's movie hi Kavya Arivumani

கவின் / காவ்யா அறிவுமணி - இன்ஸ்டாகிராம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 5:28 pm IST

நடிகர் கவினின் புதிய படத்தில், பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் காவ்யா அறிவுமணி நடித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ரசிகர்கள் பலர் காவ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கவின் - நயன்தாரா இணைந்து நடிக்கும் ஹாய் திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில், மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், ‘வி.டி.வி’ கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

குடும்பங்களைக் கவரும் வகையில் இளமை ததும்பும் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

காவ்யா அறிவுமணி

காவ்யா அறிவுமணி

இப்படத்தில் சின்ன திரை நடிகை காவ்யா அறிவுமணியும் நடிக்கிறார். இது தொடர்பான தகவல் முன்கூட்டியே வெளியான நிலையில், ஜீ ஸ்டூடியோஸ் தற்போது இதனை தனியொரு பதிவாக வெளியிட்டுள்ளது. இப்படத்தில் மைதிலி என்ற பாத்திரத்தில் இவர் நடிக்கவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

காவ்யா கடந்துவந்த பாதை

2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற பாத்திரத்தில் சின்ன திரையில் அறிமுகமானார் காவ்யா அறிவுமணி.

பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் விஜே சித்ராவுக்கு பதிலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில், காவ்யாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சின்ன திரையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெள்ளித் திரையிலும் நடிக்க அடிக்கடி ஆடிஷன் கொடுத்து வந்த நிலையில், மிரள் படத்தில் 2022-ல் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து 2023-ல் ரிப்பப்பரி, 2025-ல் நிறம் மாறும் உலகில் என அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தினார். தற்போது ஏராளமானப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Summary

Kavya Arivumani acted in Kavin Nayanthara's movie hi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.