ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

14 நாள்கள் தி ஒடிசி பட வசூலை இரு நாள்களில் நெருங்கிய ஸ்பைடர்மேன்!

நடிகர் டாம் ஹாலண்ட் நடித்துள்ள ’ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் வசூல் குறித்து...

The Odyssey, Spider-Man: Brand New Day posters.

தி ஒடிசி, ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே போஸ்டர்கள். - படங்கள்: ஐமேக்ஸ், சோனிபிக்சர்ஸ் இந்தியா.

Published On :1 ஆகஸ்ட் 2026, 4:03 pm IST

நடிகர் டாம் ஹாலண்ட் நடித்துள்ள ’ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ என்ற திரைப்படம் இந்தியாவில் மட்டுமே இரண்டு நாள்களில் ரூ.138 கோடி வசூலித்துள்ளது.

கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘தி ஒடிசி’ திரைப்படம் இதுவரைக்கும் இந்தியாவில் ரூ. 165.85 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடிப்பில் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 31) வெளியானது.  படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ.72. 44 கோடி வசூலித்து, இந்தியாவில் முதல் நாளிலேயே அதிகம் வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்தது.

இந்த நிலையில், இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் 16,902 காட்சிகள் ஒதுக்கப்பட்டன. இரு நாள்களில் மட்டும் ரூ.131.46 கோடி வசூலித்துள்ளது. இது 14 நாள்கள் ஓடிய ஒடிசி படத்தின் வசூலை நெருங்கிவிட்டது. அடுத்த நாளில் தாண்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில் 173 அமெரிக்க மில்லியன் டாலர் வரையில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,650 கோடி) வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் படத்தின் தயாரிப்புச் செலவில் 77 சதவிகிதத்தை இரு நாள்களிலேயே இந்தப் படம் வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Spider-Man: Brand New Day nears the 14-day box office collection of 'Odyssey' in just 2 days!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.