/

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

துருவ நட்சத்திரம் வெளியீடு குறித்து...

News image

விக்ரம்

Updated On :30 ஏப்ரல் 2026, 1:11 pm

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவான இப்படம், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

இப்படத்தின் டீசர், டிரைலர் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தபோதும் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு இறுதி நேரத்தில் வெளியீடு சிக்கல்களைச் சந்தித்தது.

இந்த நிலையில், துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு தொடர்பாக தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப். 30) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ’துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்துள்ளார். அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால், இப்படத்தை மே 14 ஆம் தேதி வெளியிட கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Information about the release date of Dhruva Natchathiram has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.