விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள, தமிழ்செல்வியின் கதையை சொல்லும், "சின்ன மருமகள்" தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு சின்ன மருமகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
டிஆர்பியிலும் முன்னணியில் உள்ள சின்ன மருமகள் தொடர், ஸ்வாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் 600 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் நடிகை ஸ்வேதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நவீன்குமார் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் தாமரைச் செல்வி, பானுமதி, சங்கவி ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
அண்மையில், சின்ன மருமகள் தொடரில் நடிகை சுஜிதா இணைந்துள்ளது, கதையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சின்ன மருமகள் தொடரில் ஐஸ்வர்யா பாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா, இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதில் நடிகை ஸ்வேதா குமார் ஐஸ்வர்யா பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகை ஸ்வேதா குமார் மகாநதி தொடரில் யமுனா பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர். சின்ன மருமகள் தொடரில் நடிகை ஸ்வேதா குமார் இணைந்துள்ளது, தொடருக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.
Summary
A key character has been replaced in the series Chinna Marumagal, currently airing on Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

600 நாள்களை நிறைவு செய்த சின்ன மருமகள்!

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

கெளரி தொடரில் ரோஜா தொடர் நடிகை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு



