கருப்பு திரைப்படத்தில் இடம்பெறவுள்ள 'கருப்பா கூட வா' எனும் நான்காவது பாடல் தற்போது (ஏப். 28) வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஏப். 26 ஆம் தேதி நடைபெற்றது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மே. 14 ஆம் தேதி ’கருப்பு’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
நீண்ட நாள்களாக வெளியீட்டைச் சந்திக்காமல் இருந்ததால் சூர்யா ரசிகர்கள் கருப்பு வெளியீட்டுக்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
நடிகர் சூர்யா வழக்குரைஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் கருப்பு படத்தின் 4வது பாடல் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அறிவித்துள்ளார்.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட பதிவில், “கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும் “கருப்பா கூட வா” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
நேரத்தைக் குறிப்பிடாமல் இருந்தாதால் ரசிகர்கள் நீண்ட நேரமாகக் காத்துக்கொண்டிருந்தார்கள். இது குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், “நம்ம முன்னோர் பாட்டு, நம்ம பாட்டனோட பாட்டு, நம்ம குலதெய்வப் பாட்டு எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு!!” எனக் கூறி இசையமைப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Summary
Our Grandfather's Song... The track from the movie Karuppu has been released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று மாலை வெளியாகிறது 'கருப்பா கூட வா' பாடல்!

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி
கருப்பு 3-வது பாடல்!

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


