பாக்கியலட்சுமி தொடரில் நடித்த நடிகைகளான திவ்யா கணேசன் உள்ளிட்டோர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
கோடை காலத்தையொட்டி தாய்லாந்து சென்றுள்ள நடிகைகள், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் 2020 முதல் 2025 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வந்தது. விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்குப் பிறகு அதிக நாள்கள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையை பாக்கியலட்சுமி பெற்றுள்ளது.
இத்தொடரின் பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் உள்ள பாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததால், பலதரப்பட்ட மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட தொடராக பாக்கியலட்சுமி இருந்தது.
இத்தொடரில் நடித்த திவ்யா கணேசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்று வெற்றியாளராகவும் மாறி பலரைக் கவர்ந்தார். இந்நிலையில், இத்தொடரில் முக்கிய பாத்திரங்களில் நடித்த நடிகை திவ்யா கணேசன், நேஹா மற்றும் அக்ஷிதா அசோக் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

தாய்லாந்தில் திவ்யா கணேசன், நேஹா, அக்ஷிதா - இன்ஸ்டாகிராம்
கோடை விடுமுறையை உற்சாகமாகக் கழிக்கும் வகையில் அவர்கள் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் தாய்லாந்து செல்ல வேண்டும் என்ற திவ்யாவின் கனவும் நனவாகியுள்ளது.

தாய்லாந்தில் திவ்யா கணேசன் - இன்ஸ்டாகிராம்
அங்கு மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், விடியோக்களை நடிகை திவ்யா கணேசன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் திவாகரின் தொல்லை தாங்காமல் தாய்லாந்துக்கு திவ்யா சென்றுவிட்டதாகவும், பெண்களின் பயணம் என்றுமே தனித்துவமானது எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
Baakiyalakshmi Actress Divya Ganesan on a Trip to Thailand
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!

தாய்லாந்து சென்ற எதிர்நீச்சல் நடிகை ஹரிபிரியா இசை!

படப்பிடிப்பின் நடுவே... சுற்றுலாவுக்குச் சென்ற எதிர்நீச்சல் குழு!
வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் திவ்ய பாரதி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



