இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகர் விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி.
ஹிந்தியில் ஷாருக்கானை இவர் இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பான் இந்திய வெற்றிப்படமானதால், பாலிவுட்டில் அட்லிக்கு வாய்ப்புகள் அதிகரிக்கத் துவங்கின. இதனால், மும்பையிலேயே குடியேறியுள்ளார்.
தற்போது, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு அட்லி அறிவித்திருந்த நிலையில், தன் மகன் வீருக்கு தங்கை பிறந்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு வீர் என்கிற ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Director Atlee and Priya welcome a baby girl!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர படத்தினை நிராகரித்த பிருத்விராஜ்..! கதையில் மாற்றம் செய்த இயக்குநர்!

ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்!

ராக்கா பல ஆண்டு கனவு: அட்லி

இயக்குநர் பாரதிராஜாவின் நிலைமை என்ன?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


