நடிகை ஹரிகா சாது பிரதான நடிக்கும் மணமகளே வா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியத்துவம் பெறா (non prime) நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.
வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் உள்ளிட்ட பலரும் மதிய நேர தொடர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
திருமகள் தொடரில் நாயகியாக நடித்த ஹரிகா சாது நடிக்கும் தொடரான மணமகளே வா தொடர், கடந்த 2024 ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மணமகளே வா தொடரானது, 500 நாள்களைக் கடந்துள்ளது.
இந்தத் தொடரில், விக்கி ரோஷன் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்தத் தொடரில் லோகேஷ் பாஸ்கர், லட்சுமி, ஜெயந்தி நாராயணன், சுவேதா, அணு, டேவிட் ராஜா, நிரஞ்சனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், மணமகளே வா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணமகளே வா தொடரின் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடருக்குப் பதிலாக, புதிதாக ஒளிபரப்பாகவுள்ள தொடர் குறித்தும், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Summary
It has been reported that the series Manamagale Vaa, starring actress Harika Sadu in the lead role, is set to conclude soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

1200 நாள்களைக் கடந்த எதிர்நீச்சல் தொடர்!

500 நாள்களை நிறைவு செய்த மதிய நேர சீரியல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



