நடிகர் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர துணை முதல்வராக தேர்வாகியும் தனது நடிப்பைக் கைவிடாமல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பவன் கல்யாண். இவர் இறுதியாக நடித்த ஓஜி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இதனிடையே, இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் உஸ்தாத் பகத் சிங். கடந்த மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, ராஷி கன்னா, பார்திபன், ராவ் ரமேஷ், கே.எஸ். ரவிகுமார், கெளதமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், உஸ்தாத் பகத்சிங் திரைப்படம் வரும் ஏப். 16 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
Summary
The OTT release date for actor Pawan Kalyan's film Ustaad Bhagat Singh has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

யூத் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜெயிலர் - 2: ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண்?

விமலின் வடம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


