இயக்குநர் சேரன் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. தேசிய, மாநில கட்சிகள் அனைத்தும் களத்தில் தங்களின் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் கூறி மக்களிடம் ஓட்டுச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அதேநேரம், நடிகரும் தவெக தலைவருமான விஜய் தன் முதல் தேர்தலைச் சந்திக்கிறார். பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவும் இருப்பதால் எத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பரப்புரைக்காக விஜய்யைப் போன்று வேடமிட்ட டூப் ஒருவரை வைத்து கொளத்தூர் தவெக வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்ட காணொலி இணையத்தில் வைரலானது.
இதனைக் கண்ட இயக்குநரும் நடிகருமான சேரன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல். இந்த பரப்புரை நிலை சரிதானா? இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா? அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு. நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும்... நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரசாரம் செய்கிறார். அந்த தலைவன் எங்கே? முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே?
சிந்தியுங்கள் மக்களே... நீங்கள், யார் வேண்டுமா வேண்டாமா எனக் கேட்ட முதல்வர் ஸ்டாலின் இந்த வயதில் இறங்கி நடந்து பிரசாரம் செய்கிறார். ஆனால், நீங்கள் ஒரு மணி நேரம்தான் அனுமதி என காரணம் சொல்லி பிரசாரத்தை ரத்து செய்கிறீர்கள். இப்போ சொல்லுங்க மக்களே.. நிஜப்போட்டி திமுக Vs நாதக தானே...? எனக் கூறியுள்ளார்.
இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள் பலரும் சேரனைத் தாக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Summary
actor, director cheran has questioning on tvk vijay's election campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம்

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


