மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

நடிகர் சூர்யாவின் கதைத் தேர்வுகள் குறித்து...

News image

சூர்யா - file

Updated On :7 ஏப்ரல் 2026, 8:10 am

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் என்றில்லாமல் தென்னிந்திய அளவில் மிக நல்ல நடிகராகவும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கும் பிடிக்கும் நாயகனாகவே சூர்யா இருக்கிறார்.

தோல்விப்படங்கள் அமைந்தாலும் அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெறும் இயக்குநர்களுடன் பணியாற்றுவதையும் சூர்யா வழக்கமாக வைத்துள்ளார்.

இந்தாண்டு மட்டும் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து 3 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

இதில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய கருப்பு திரைப்படத்தில் வழக்குரைஞராகவும் இயக்குநர் வெங்கட் அட்லுரியின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் தொழிலதிபராகவும் நடித்துள்ளார். மேலும், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவரும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தும் வருகிறார்.

ரெட்ரோ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய கதாபாத்திரங்களில் சூர்யா தொடர்ந்து நடித்து வருவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

actor suriya acts as cop, Advocate and buisness man his upcoming movies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.