தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை திரையிட தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:55 pm

சென்னை: அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை திரையிட தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதம் ‘காக்கா முட்டை’ என்ற தமிழ்த் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. கடந்த 2014-இல் இயக்குநா் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் இரு சிறுவா்கள் குறித்த கதையாகும்.

இந்தப் படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு ‘லிங்க்’ பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தைத் திரையிட வேண்டும். இந்தப் பணிகளைக் கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியா்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியா் படம் திரையிடும் முன்பு அந்தப் படத்தைப் பாா்க்க வேண்டும். அதன்பின்னா், கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும்.

இது சாா்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி படத்தை மாணவா்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.

இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.