எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பிருத்விராஜின் விலாயத் புத்தா!
பிருத்விராஜின் விலாயத் புத்தா திரைப்படம் குறித்து...
பிருத்விராஜின் விலாயத் புத்தா திரைப்படம் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
நடிகர் பிருத்விராஜின் விலாயத் புத்தா திரைப்படம் வணிக ரீதியாக ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது.
சந்தன மரக்கடத்தல்களை மையமாகக் கொண்டு பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ’விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு விலாயத் புத்தா என்கிற திரைப்படம் உருவானது.
இந்தப் படத்தில் நாயகனாக பிருத்விராஜும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஷமி திலகன், அனு மோகன், சூரஜ் வெஞ்சாரமூடு, டீஜே அருணாச்சலம், டி.எஸ்.கே. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
எம்புரான் திரைப்படத்தை இயக்கிபின் பிருத்விராஜ் நாயகனாக நடித்த படமென்பதால் விலாயத் புத்தா மேல் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், படத்திற்குக் கிடைத்த கலவையான விமர்சனங்களால் இதன் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் வெளியான 4 நாள்களில் வெறும் ரூ. 4 கோடியை மட்டுமே வசூலித்திருப்பது அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
காரணம், பிருத்விராஜ் சலார், எம்புரான் போன்ற படங்களில் நடித்தும் அவருடைய முதல்நாள் வசூலில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. மேலும், ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான விலாயத் புத்தா இந்தாண்டு மலையாள சினிமாவின் பெரிய தோல்விப்படமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பிருத்விராஜ் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கும் வாரணாசி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜன நாயகன் இசை வெளியீட்டில் இணையும் பிரபலங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது