தனுஷ் - மிருணாள் தாக்குர் இடையே காதலா? மீண்டும் பரவும் கிசுகிசு
நடிகர் தனுஷ், மிருணாள் தாக்குர் இடையேயான கிசுகிசுக்கள் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன.
நடிகர் தனுஷ், மிருணாள் தாக்குர் இடையேயான கிசுகிசுக்கள் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன.
By இணையதளச் செய்திப் பிரிவு
Sasikumar
நடிகர் தனுஷ், மிருணாள் தாக்குர் இடையேயான கிசுகிசுக்கள் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன.
கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தமிழில் அண்மையில் இவர், இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தனுஷ் படங்களில் பிஸயாக நடித்து வந்தாலும் அவரைத் சுற்றி வதந்திகளும் அடிக்கடி பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. தனுஷும் நடிகை மிருணாள் தாக்குரும் டேட்டிங் செய்வதாக அண்மையில் வதந்தி பரவி வந்தது. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறி அந்த வதந்திக்கு நடிகை மிருணாள் தாக்குர் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
சிறிதுநாள்கள் தணிந்திருந்த அந்த வதந்தி மீண்டும் விவாதத்தை கிளம்பியிருக்கிறது. மிருணாள் தாக்குர் தனது அடுத்த படமான 'தோ தீவானே ஷாஹர் மெய்ன்' படத்தின் அனிமேஷன் டீசரை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இந்த டீசர் விடியோவிற்கு, நடிகர் தனுஷ் தோற்றமும் ஒலியும் நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருந்தார்.
அரசன் படத்தில் விஜய் சேதுபதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதற்கு மிருணாள் தாக்குர் பதிலுக்கு இதய ஈமோஜியை பதிவிட்டார். தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை வைத்து இருவரும் இன்னும் டேட்டிங் செய்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக மிருணாள் தாக்குர் நடித்த 'சன் ஆஃப் சர்தார் 2' திரைப்பட நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டார்.
அப்போது தனுஷிடம் மிருணாள் தாக்குர் நெருக்கமாகப் பேசிய விடியோக்களும் இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
The duo had previously fuelled dating rumours when they were spotted sharing a warm hug at the Son of Sardaar 2 premiere earlier this year
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது