தொடர்ந்து அவமதித்தார்! இயக்குநர் மீது திவ்ய பாரதி குற்றச்சாட்டு!
தெலுங்கு இயக்குநர் குறித்து திவ்ய பாரதி...
தெலுங்கு இயக்குநர் குறித்து திவ்ய பாரதி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
நடிகை திவ்ய பாரதி இயக்குநர் ஒருவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. பேச்சுலர் வெற்றிக்குப் பின் தமிழில் பெரிய நாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, முகன் ராவுடன் ’மதி மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தெலுங்கில் ’பாகல்’ படத்தை இயக்கிய நரேஷ் குப்பிலியின் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் திவ்ய பாரதி விலகினார். தொடர்ந்து, இயக்குநரும் வெளியேறினார்.
ஆனால், இயக்குநர் நரேஷ் சமூக வலைதளங்களில் நடிகை திவ்ய பாரதியை மறைமுகமாகத் தாக்கி வந்ததுடன் சிலாகா என்கிற வார்த்தையையும் பயன்படுத்தினார். அப்படியென்றால், தெலுங்கில் பெண்களைத் தவறாக குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தையாம்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த திவ்ய பாரதி, “பெண்களை இந்தச் சொல்லில் அழைப்பது நகைச்சுவை அல்ல. இது பெண்கள் மீதான வெறுப்பின் பிரதிபலிப்பு. இந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் இதே மாதிரிதான் நடந்து கொண்டார். தொடர்ந்து, பெண்களை அவமாரியாதை செய்ததுடன் தன் கலைக்கே துரோம் செய்தார்.
எனக்கு ஏமாற்றம் என்னவெனில் இது படத்தின் நாயனுக்கு தெரிந்திருந்தும் அவர் இயக்குநரின் போக்கு அனுமதித்ததுதான். இதனால், கேலி, கிண்டல்கள் இல்லாத இடத்தில்தான் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.” என்றார்.
திவ்ய பாரதியின் இந்த எதிர்வினை சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மறுவெளியீடாகும் அமர்க்களம்!
actor divya bharathi slams telugu movie director naresh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது