இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநரானார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளதால் படம் பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இதற்கிடையே, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். அண்மையில், படத்தின் பூஜை முடிந்திருக்கிறது.
இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலையும் (martial arts) கற்று வருகிறார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் மாதேஸ்வரன், “வன்முறை மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார். இதனால், இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: எனக்கும் தனுஷுக்கும் பிரச்னையா? வெற்றி மாறன் விளக்கம்!
lokesh kanagaraj and arun matheswaran get a picture together.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மே வெளியீடாக டிசி!
இனி நேர்காணல்கள் கிடையாது! முடிவு எடுத்த லோகேஷ் கனகராஜ்?
29 வெளியீட்டுத் தேதி!

கிண்டலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

