டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பிச்சைக்காரன் - 3 படத்தை இயக்கி நடிக்கும் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -3 படத்தில் நடிக்கிறார்..

News image

விஜய் ஆண்டனி

Updated On :26 ஜூன் 2025, 8:47 am

நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் - 3 படத்தை இயக்கி நடிப்பதாக அறிவித்துள்ளார்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி எடுத்தார். ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது, மார்கன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இப்படம் 2027 கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என்பதையும் அறிவித்துள்ளார்.

Summary

vijay antony's pichaikaaran 3 update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.