பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு குறித்து...

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜூன் 2025, 3:06 pm

DIN

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

முகேனின் ராவ்வின் ஜின் தி பெட் படம் நாளை (ஜூன் 20) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சேவ் நல்ல பசங்க என்ற வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

பரியேறும் பெருமாள் படத்தின் கன்னட ரீமேக்கான கார்க்கி திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மனு ஸ்வராஜ் இயக்கத்தில் சூரஜ் வெஞ்சமூடு, ஷரப் யு தீன் , சந்தீப் பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படக்களம் திரைப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

அகமது கபீர் இயக்கியுள்ள கேரளா கிரைம் பைல்ஸ் வெப் தொடரின் இரண்டாம் பாகம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ராணியா ராணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படமான பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

நரேன், கதிர் நடிப்பில் வெளியான யுகி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான லெவன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படம் ஜீ5 ஓடிடியிலும் ஏஸ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும் காணக்கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.