பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

மறுவெளியீடானது பாட்ஷா திரைப்படம்..! இயக்குநர் கூறியதென்ன?

நடிகர் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் மறுவெளியீடு குறித்து...

News image
பாட்ஷா போஸ்டர், ரஜினியுடன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. - படங்கள்: எக்ஸ் / சுரேஷ் கிருஷ்ணா, சத்யா மூவிஸ்.
Updated On :18 ஜூலை 2025, 10:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரஜினி நடிப்பில் உருவான பாட்ஷா திரைப்படம் இன்று திரையரங்குகளில் மறுவெளியீடானது.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

தேவா இசையில் அனைத்து பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் ரகுவரன், நக்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

பாட்ஷா போஸ்டர்.

பாட்ஷா போஸ்டர்.

இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பாட்ஷா படத்தை சென்னையில் பிவிஆர் அரங்குகளில் ரசிகர்கள் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “டியர் ரஜினி சார், பாட்ஷா உங்களால்தான் உருவானது. உங்களின் துள்ளலான நடிப்பு... உன்னதமான திரை அனுபவம்...

நீங்கள் பாட்ஷாவாக நடிக்கவில்லை, வாழ்ந்தீர்கள். கல்ட் கிளாசிக்காக சினிமா வரலாற்றில் எப்போதும் நீடிக்கும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் மறுவெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களால் கொண்டாடப்பட்ட பாட்ஷா திரைப்படம் இன்று அற்புதமான புதிய வடிவத்தில் திரையரங்குகளுக்குத் திரும்ப வருகிறது.

மறக்க முடியாத சினிமா அனுபவத்தை  இது வழங்கும் - அடோம்ஸில் முழு ஒலிப்பதிவையும் மீண்டும் உருவாக்கி முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது!” எனக் கூறியுள்ளது.

ரஜினி கூலி படத்தில் நடித்து முடித்து, ஜெயிலர் -2 படத்தில் நடித்து வருகிறார்.

summary

The film Baadshah, starring actor Rajinikanth, was re-released in theaters today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.