திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!
திரையரங்க உரிமையாளர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் அறிக்கை...
திரையரங்க உரிமையாளர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் அறிக்கை...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட ஆக்கமாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவதாரைப் பார்க்காத ரசிகர்கள் இருக்கிறார்களா? என்கிற அளவுக்கு அப்படத்திற்கு வரவேற்பு கிடைத்ததால் 2022-ல் அவதார் - 2 வெளியாகி அதுவும் உலகளவில் ரூ. 15 ஆயிரம் கோடி வசூலைப் பெற்று சக்கைபோடு போட்டது.
இப்போது, ஜேம்ஸ் மேமரூன் அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ் (avatar - fire and ash) என்கிற மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட இப்படம் இந்தாண்டு டிசம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் திரையரங்க புரஜெக்டர் ஆபரேட்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளில் ஒலியின் ஃபேடர் தரத்தை (Fader level) 7.0 ஆக வைக்க வேண்டும். அப்போதுதான் இப்படத்தின் முழுமையான ஒலி அனுபவம் கிடைக்கும். தனிப்பட்ட முறையிலேயே நான் மிக்ஸிங் பணியில் இருப்பதால் அதற்கு குறைவாக வைக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு திரைகள் கொண்ட தனித் திரையரங்கங்களில் இந்த அளவை வைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் மல்டிபிளக்ஸுகளில் ஒலியின் சப்தத்தைக் கூட்டினால் அருகே இருக்கும் கடைகளில் கேட்கும் என்பதால் அங்கு வாய்ப்பில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: புரமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை? கோபமடைந்த யோகி பாபு!
james cameron on avatar fire and ash sound quality
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது