பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?
இந்த வார நாமினேஷன் பட்டியலில் 11 பேர் இடம்பெற்றுள்ளது குறித்து...
இந்த வார நாமினேஷன் பட்டியலில் 11 பேர் இடம்பெற்றுள்ளது குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Manivannan.S
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்ற நபர்களின் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த வாரம் 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 11 நபர்களில் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெறும் நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வது வாரத்தை எட்டியுள்ளது. 10 வது வாரத்தின் இறுதியில் ரம்யா ஜோ, வியானா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது 11 வாரத்திற்குள் போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இந்த வாரத்தின் கேப்டனாக கானா பாடகர் வினோத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் 72 வது நாளான இன்று (டிச., 15) நிகழ்ச்சியில் தொடரத் தகுதியற்ற நபர்கள் குறித்த வாக்கெடுப்பு போட்டியாளர்களிடையே நடைபெற்றது.
இதில் ஒரு போட்டியாளர் இருவரைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அனைவரும் தேர்வு செய்த பிறகு, வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து பிக் பாஸ் அறிவிப்பார்.
அந்தவகையில் இந்த வாரம், விஜே பார்வதி, சான்ட்ரா, அமித் பார்கவ், எஃப்.ஜே., கமருதீன், அரோரா, ஆதிரை, திவ்யா கணேசன், சுபிக்ஷா, சபரிநாதன், கனி திரு ஆகிய 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களின் ஆட்டத்தைப் பொறுத்து மக்கள் இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க வாக்களிப்பார்கள். இதில் அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர், பிக் பாஸ் வீட்டில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
இதுவரை நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், திவாகர், கெமி, ப்ரஜின், ரம்யா ஜோ, வியானா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: அம்மா, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகை வியானா!
bigg boss 9 tamil 11th week nomination list out
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது