எனக்கு எதுவும் தெரியாது... கைதி - 2 படத்தைக் கைவிட்ட கார்த்தி?
கைதி - 2 குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி பதில்...
கைதி - 2 குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி பதில்...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
கைதி - 2 திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்துள்ளார்.
நடிகர் கார்த்தியை வைத்து கைதி - 2 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதற்கான அறிவிப்பு வந்ததும், மீண்டும் டில்லியைக் (கார்த்தி) காண ரசிகர்களிடம் ஆவல் எழுந்தது.
டில்லி யார்? சிறைக்குச் செல்வதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்? என்கிற கேள்விகளுக்கு கேங்ஸ்டர் பாணி கதையாக லோகேஷ் உருவாக்குவார் என ஏகப்பட்ட அனுமானங்கள் எழுந்தன. இப்படத்தின் படப்பிடிப்பும் இந்த டிசம்பரில் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கார்த்தி இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் படத்தில் நடிக்கச் சென்றார். லோகேஷ் கனகராஜும் நடிகர் அல்லு அர்ஜுன் உடனான படத்தில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்பட்டதால் கைதி - 2 கைவிடப்படலாம் என ஊகிக்கப்பட்டது.
இந்த நிலையில், வா வாத்தியார் திரைப்பட புரமோஷனில் பங்கேற்ற நடிகர் கார்த்தியிடம், “கைதி - 2 திரைப்படம் என்ன ஆனது?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு கார்த்தி, “எனக்கு அப்படம் குறித்த எந்த அப்டேட்டும் தெரியாது” எனக் கூறினார். இதனால், கைதி - 2 திரைப்படம் கைவிடப்பட்டதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் நாளை (டிச. 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: வா வாத்தியார் வெளியீட்டில் மீண்டும் சிக்கல்!
actor karthi told, 'even i dont have any update on kaithi - 2 movie'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது