பிக் பாஸ் 9: காதலிப்பதற்காக பிக் பாஸ் வந்தார் விஜே பார்வதி!
காதலிப்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜே பார்வதி கலந்துகொண்டதாக இசைக்கலைஞர் எஃப்.ஜே. விமர்சித்துள்ளது குறித்து..
காதலிப்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜே பார்வதி கலந்துகொண்டதாக இசைக்கலைஞர் எஃப்.ஜே. விமர்சித்துள்ளது குறித்து..
By இணையதளச் செய்திப் பிரிவு
Manivannan.S
காதலிப்பதற்காகவே பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதி கலந்துகொண்டதாக இசைக்கலைஞர் எஃப்.ஜே. விமர்சித்துள்ளார்.
பிக் பாஸ் விதிகளை மீறும் வகையில் ஒலிவாங்கியை (மைக்) கழற்றிவிட்டு கமருதீனுடன் ரகசியம் பேசிக்கொண்டு இருப்பதுதான் பார்வதியின் ஆட்டம் எனவும் குற்றம் சாட்டினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 10 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான கேப்டனாக அமித் பார்கவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாரத்திற்கு நீதிமன்றமும் வழக்குகளும் என்ற போட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் இருவர் மீது வழக்கு தொடரலாம். அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி உண்மை யார் பக்கம் உள்ளது என்று தீர்ப்பு வழங்க வேண்டும்.
போட்டியின் மூன்றாவது நாளான இன்று இசைக் கலைஞர் எஃப்.ஜே., மீது விஜே பார்வதி வழக்குத் தொடர்ந்தார். போட்டியில் பங்கேற்க கடும் உழைப்பை செலுத்திவரும் தன்னை காதலிப்பதற்காக பிக் பாஸ் வந்துள்ளதாக அவதூறு பேசுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பார்வதி தரப்பில் விக்ரமும் எஃப்.ஜே., தரப்பில் சபரிநாதனும் வாதாடி வருகின்றனர். இந்நிலையில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதும் காதலிப்பதற்காகத்தான் பார்வதி பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளதாக மீண்டும் கூறினார்.
ஒலிவாங்கியை கழற்றிவிட்டு கமருதீனுடம் ரகசியம் பேசுவதும் அதனை பிக் பாஸ் கண்டிப்பதுமே இதற்கான ஆதாரம் எனவும் விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி, பிக் பாஸ் வீட்டில் தான் என்ன செய்தாலும் அதனை கேட்க இவன் யார் எனக் கேள்வி எழுப்பினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்த விடியோவில் பலரும் எஃப்.ஜே.வுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் விதிகளை தெரிந்தே அடிக்கடி மீறுவது கண்டிக்கத்தக்கது என்றும், மற்ற போட்டியாளர்களுடன் பார்வதி சண்டையிடுவது அல்லது கமருதீன் உடன் ரகசியம் பேசுவது மட்டுமே பார்வதியின் ஆட்டமாக உள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: விஜே பார்வதியையும் கமருதீனையும் ஒதுக்கி வைக்கும் கேப்டன்!
BIgg boss 9 tamil VJ parvathy Kamarudin game complaint by FJ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது