பிக் பாஸ் 9: ப்ரஜின் வெளியேற திவ்யா கணேசன் காரணமா?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ப்ரஜினிடம் சான்ட்ரா குறித்து பேசிய திவ்யா...
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ப்ரஜினிடம் சான்ட்ரா குறித்து பேசிய திவ்யா...
By இணையதளச் செய்திப் பிரிவு
Manivannan.S
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சான்ட்ராவின் செயலுக்காக நடிகை திவ்யா கணேசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 9 வாரங்களைக் கடந்து 10 வது வாரத்தை எட்டியுள்ளது. 9 வது வார இறுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக போட்டியில் இருந்து நடிகர் ப்ரஜின் வெளியேற்றப்பட்டார்.
ப்ரஜின் வெளியேறும்போது, தனது மனைவி சான்ட்ராவுக்கு உணர்வுப்பூர்வமாக பலமாகவும் ஆதரவாகவும் இருக்கும்படி திவ்யா கணேசனிடம் கேட்டுக்கொண்டார்.
ஏனெனில், சில சூழல்களில் மனமுடைந்து அழுது மயங்கிவிடுவதும், மருத்துவர் உதவி தேவைப்படுவதும் சான்ட்ராவுக்கு அடிக்கடி நிகழ்வதால், அவர் இவ்வாறு கூறிச் சென்றார்.
இந்நிலையில், 10 வது வார தொடக்கத்தின் முதல் நாள் இரவில், திவ்யாவை வெறுக்கும்படியாக சான்ட்ரா பேசினார். தனது கணவர் வெளியேறியதைப் போன்று தானும் வெளியேற வேண்டும் என நினைக்கிறீர்களா? என திவ்யாவை நோக்கிக் கேட்டார்.
தான் யாரிடமும் பேச விரும்பவில்லை என்றும், தனிமையில் இருக்க விடுமாறும் திவ்யாவிடம் ஆக்ரோஷமாகக் கூறினார். இதனால் மனமுடைந்த திவ்யா, தனிமையில் அழுது வருந்தினார்.
இதனைத் தொடர்ந்து வெளியேறியுள்ள ப்ரஜினிடம் பேசுவதாக, பிக் பாஸ் கேமராவை நோக்கிப் பேசிய திவ்யா, சான்ட்ராவின் மனநிலை குறித்து விவரித்தார்.
ப்ரஜின் வெளியேற திவ்யா காரணம் என சான்ட்ரா நினைப்பதால், இவ்வாறு நடந்துகொள்வதாக விளக்கினார்.
இது தொடர்பாக திவ்யா பேசியதாவது, ''ப்ரஜின் நீங்கள் இங்கு இல்லை. சான்ட்ராவுக்கு என் மீது என்ன கோவம் என்று தெரியவில்லை. மற்றவர்களோடு பேசும் சான்ட்ரா என்னிடம் பேசுவதில்லை.
என்னை வேண்டுமென்றே நிராகரிக்கிறார். இதற்கான காரணம் என்ன? அதனை யோசித்தே என்னுடைய போட்டியில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.
என்னை முழுமையாக நிராகரிப்பதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், பிக் பாஸ் வீட்டில் அவருக்கு எது நடந்தாலும் அவருக்கு ஆதரவாக நான் நிற்பேன்'' எனக் கூறினார். திவ்யாவின் இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | போட்டி வேறு, உறவு வேறு! பாராட்டுகளைப் பெறும் ப்ரஜின் - விஜய் சேதுபதி நட்பு!!
இதையும் படிக்க | கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓடிய சான்ட்ரா!
vijay tv bigg boss 9 tamil prajean sandra divya bond
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது