15 Dec, 2025 Monday, 11:25 PM
The New Indian Express Group
செய்திகள்
Text

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வித்தியாசமான படங்கள்!

PremiumPremium

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On04 Dec 2025 , 11:18 AM
Updated On11 Dec 2025 , 2:49 PM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

C Vinodh

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

தி கேர்ள்ஃபிரண்ட்

ரஷ்மிகா மந்தனா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள தி கேர்ள்ஃபிரண்ட் படம், கடந்த நவ. 7 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் திரைப்படம் வரும் நாளை(டிச. 5) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

டைஸ் ஐரே

நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடித்துள்ள டைஸ் ஐரே திரைப்படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

ஆன்மாக்களுக்கு வழங்கப்படும் இறுதித் தீர்ப்பு என்பதே லத்தீன் மொழியில் டைஸ் ஐரே எனப்படுகிறது. அமானுஷ்ய திரைக்கதையுடன் ஹாரர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

குற்றம் புரிந்தவன்

நடிகர் பசுபதி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள குற்றம் புரிந்தவன் இணையத் தொடரில், லட்சுமி பிரியா, விதார்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செல்வமணி எழுதி இயக்கியுள்ள இந்த இணையத் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. இது மொத்தம் எட்டு எபிசோடுகளை கொண்டது.

ஸ்டீஃபன்

சீரியல் கில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள ஸ்டீஃபன் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.

மிதுன் இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட், கோமதி சங்கர், விஜய்ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன்

ஜஸ்வினி இயக்கத்தில் நடிகர்கள் அஸ்வின், குரு லக்ஷ்மண் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இணையத் தொடர் தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன்.

தூள்பேட் பகுதியில் நடைபெறும் சம்பவத்தை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு அடுத்தடுத்த எபிசோடுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து.

தி கிரேட் ப்ரீ-வெட்டிங் ஷோ

ராகுல் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் திருவீர் நடிப்பில் வெளியான படம் `The Great Pre-Wedding Show'.

திருமணத்திற்கு முன் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை மையப்படுத்தி நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

கடந்த வார ஓடிடி (ஆண்பாவம் பொல்லாதது)

தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.

இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

ஆர்யன்

இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ஆர்யன்.

நடிகர் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

சசிவதனே

ரக்‌ஷித், கோமலி பிரசாத் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்த சசிவதனே என்ற தெலுங்கு மொழிப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

மாஸ் ஜாதரா

ரவி தேஜா, ஸ்ரீலீலா, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நடிப்பில் வெளியான மாஸ் ஜாதரா என்ற தெலுங்கு மொழிப்படம் கடந்த ஆக. 27-ல் திரையரங்குகளில் வெளியானது.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் காணக்கிடைக்கிறது.

பெட் டிடெக்டிவ் (Pet Detective)

நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட மலையாள மொழிப்படமான பெட் டிடெக்டிவ் திரைப்படம், தமிழ் மொழியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் ஷரஃப் உ தீன், அனுபமா பரமேஸ்வரன், விநாயகன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரேகை

தினகரன் எம். எழுதி இயக்கியுள்ள ரேகை என்ற இணையத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த இணையத் தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி ஆகியோர் காவல் அதிகாரிகளாக நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

Movies web series releasing on OTT this week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023