சசிகுமார், கவின் உடன் நடிக்கும் பிக் பாஸ் நடிகை!
பிக் பாஸ் புகழ் கெமி, புதிதாக இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறித்து...
பிக் பாஸ் புகழ் கெமி, புதிதாக இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Manivannan.S
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று வெளியேறிய நடிகை கெமி, சசிகுமார் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ராஜு முருகன் இயக்கிவரும் மை லார்ட் படத்தில் வில்லியாக நடிக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, 9 வது வாரத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக 7 வது வாரத்தில் நடிகை கெமி வெளியேற்றப்பட்டார்.
கூடைப்பந்தாட்ட வீராங்கனையான கெமி, தற்போது முழு நேர நடிகையாக மாறியுள்ளார். இந்நிலையில், தனது நடிப்புப் பயணம் குறித்து பகிர்ந்துள்ள நடிகை கெமி, புதிதாக இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் ராஜு முருகன் - சசிகுமார் கூட்டணியில் உருவாகிவரும் மை லார்ட் படத்தில் கெமி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்படம் டிசம்பர் இறுதியில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் உதவியாளர் விஷ்ணு எடவன் இயக்கும் ஹாய் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகர் கவின் - நயன்தாரா இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், சினிமாவுக்கு புதிது என்பதால், இருவருமே தனக்கு நடிக்க உதவியதாகவும் கெமி குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸில் மக்கள் மனங்களை வென்ற கெமி, அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ்! பாராட்டுகளைப் பெற்ற ப்ரஜின், கானா வினோத்!
Bigg boss 9 kemy act in sasikumar, kavin, nayanthara movies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது