ஹிந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலிய பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமானார். கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.
ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.
ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார் ஆலியா பட் ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தேவரா படத்தில் ஆலியா பட்?
இந்நிலையில் தேவரா படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டதால் படத்தில் இருக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. தேவரா படக்குழுவுடன் ஆலியா பட்டின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தேவரா (செப்.29), ஜிக்ரா (அக்.11) இரண்டு படங்களும் 10 நாள்கள் இடைவெளியில் வருவதால் இருவரும் இணைந்து இரண்டு படங்களுக்கும் புரமோஷன் செய்து வருகிறார்கள்.
ஆலியாவின் அடுத்தடுத்த படங்கள்
நடிகர் ரன்பீர் கபூரை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ராஹா எனும் பெண் குழந்தை கடந்தாண்டு டிசம்பரில் பிறந்தது.
சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் கணவர் ரன்பீருடன் லவ் அன்ட் வார் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் ஆல்ஃபா எனும் அதிரடியான கமர்ஷியல் படத்திலும் நடித்து வருகிறார்.

ஜிக்ரா போஸ்டர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சண்டைக் காட்சிகளில் அசத்திய ஆலியா பட்..! பாபி தியோல் புகழாரம்!

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் கிளிம்ஸ்!
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் கிளிம்ஸ் அறிவிப்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK





