டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இன்ஸ்டாவில் வைரலான கோல்டன் ஸ்பாரோ!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 1:03 pm

Sivashankar

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான, ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியானது. இப்பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.

அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடியுள்ளனர். ரசிகர்களிடம் கவனம் ஈர்த்த இப்பாடல் யூடியூபில் 70 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர். இவை, லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.