தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விஜய் தேவரகொண்டா - சாய் பல்லவி பட படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் பதில்!

நடிகர் விஜய் தேவரகொண்டா சாய் பல்லவியுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியுள்ளார்.

News image

விஜய் தேவரகொண்டா - சாய் பல்லவி

Updated On :3 செப்டம்பர் 2024, 10:26 am

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா 12:

2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இது விடி12 என பெயரிடப்பட்டுள்ளது.

நானி நடிப்பில் அனிருத் இசையில் கௌதம் தின்னானுரி இயக்கிய ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

விஜய் தேவரகொண்டா இதற்கிடையில் விஜய் தேவரகொண்டாவின் 13ஆவது படமாக அறிவித்த பேமிலி ஸ்டார் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா 14:

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ராகுல் சங்கராதியன் இயக்குகிறார். வரலாற்று திரைப்படமாக இது உருவாகுவது குறிப்பிடத்தக்கது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா - சாய் பல்லவி:

மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். நாயகியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ ஆங்கில ஊடகத்த்துக்கு அளித்த நேர்காணலில் , “அடுத்தாண்டு ஏப்ரலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும். விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி. விஜய் தற்போது முழுக்க முழுக்க கமர்ஷியல் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

நடிகை சாய் பல்லவி அமரன் படத்தில் நடித்துவிட்டு தண்டேல் படத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.