தமிழில், 'இருவர்', 'உன்னை போல ஒருவன்', 'ஜில்லா', 'காப்பான்' போன்ற படங்களில் நடித்திருந்தாலும், 'ஜெயிலர்' படத்தில் வந்த இரண்டு காட்சிகள் நிறைய கைதட்டல்களையும் விசில்களையும் மோகன்லாலுக்குப் பெற்று தந்தது.
கேரள மண்ணில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத 'தம்புரானாக' வீற்றிருக்கும் அவர், 'லாலேட்டன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
மோகன்லால் படமென்றாலே மிகப்பெரிய கொண்டாட்டமே கேரளத்தில் நடக்கும். சமீபத்தில், அவர் நடித்த மலைக்கோட்டை வாலிபன் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றது.
தற்போது, பிருத்விராஜ் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று மோகன்லாலின் பிறந்தநாள் என்பதால் எம்புரான் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம், பிருத்விராஜ் இயக்கத்தில் லைகா மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் பான் இந்திய படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர படத்தினை நிராகரித்த பிருத்விராஜ்..! கதையில் மாற்றம் செய்த இயக்குநர்!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

கயாது லோஹர் பிறந்த நாளில் வெளியான போஸ்டர்!

பேட்ரியாட் டிரைலர்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



