இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது இப்படத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டதால் அந்த நாளில் சில படங்கள் வெளியாக உள்ளன.
ஆரம்பத்தில் வணங்கான் படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெத்தி வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?
மீண்டும் தள்ளிச்சென்ற எல்ஐகே?
மே வெளியீட்டில் கருப்பு?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



