பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 3:10 pm

DIN

இந்த வாரமும் புதுப்படங்கள் வெளியாக தயாராகவுள்ளன. அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. சந்தானத்துக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப். 2 ஆம் தேதி வெளியாகிறது. 

யோகேந்திரன் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் நடித்துள்ள திரைப்படம் மறக்குமா நெஞ்சம். இப்படத்தில் தீனா, பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  சச்சின் வாரியர் இசையமைத்துள்ள இப்படம்  பிப். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மாருதி பிலிம்ஸ், ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் டெவில். இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு  இயக்குநர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார்.  இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

முத்து இயக்கத்தில் புதுபுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள சிக்லெட்ஸ் திரைப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.