தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெளியானது ஊர்வசியின் ‘ஜே.பேபி’ பட டிரைலர்!

நீலம் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜே.பேபி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2024, 12:43 pm

இயக்குநர் பா. ரஞ்சித் நீலம் புரடக்‌ஷனை நடத்திவருகிறார். இதன் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் குண்டு, ரைட்டர், சேதுமான், பொம்மை நாயகி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. 

நீலம் தயாரிப்பின் சார்பாக சமீபத்தில் கிரிக்கெட்டினை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

நடிகை ஊர்வசி, நடிகர் தினேஷ் இணைந்து நடித்துள்ள ஜே. பேபி படம் விரைவில் வெளியாக உள்ளது. சுரேஷ் மாரி எழுதி இயக்கியுள்ளார். 

இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நீலம் தயாரித்த படங்களில் முதன்முறையாக எந்தக் காட்சிகளும் நீக்காமலும் மியூட் செய்யப்படாமலும் யு சர்ட்பிகேட்டுடன் வெளியாகவிருக்கிறது. 

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் 700க்கும் அதிகமான படங்களில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள நடிகை ஊர்வசி இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் மார்ச் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.