எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிய திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகிவுள்ளன என்பதைக் காணலாம்.

News image
Updated On :16 பிப்ரவரி 2024, 10:16 am

DIN

இந்த வாரம் திரையரங்குகளில் அதிகமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகிவுள்ளன என்பதைக் காணலாம்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்சென் இயக்கத்தில் கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது.

நடிகர் அசோக் செல்வனின் சபா நாயகன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜித்தன் ரமேஷ் நடித்துள்ள திரில்லர் படமான ரூட் நம்பர்: 17 திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

பிரியாமணி நடித்துள்ள பாமாகலபம் 2 திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. மீரா ஜாஸ்மின் மற்றும் நரேன் நடித்துள்ள குயின் எலிசபெத் என்ற மலையாள திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.