தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

‘அடியே’ பட இயக்குநரின் புதிய படம்! ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்து!

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2024, 10:47 am

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தினை இயக்கியவர் விக்னேஷ் கார்த்திக். இந்தப் படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. சமீபத்தில் இதே மாதிரி சென்னையில் ஒரு ஐடி பெண்ணை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

திட்டம் இரண்டு படத்துக்குப் பிறகு அடியே படத்தினை இயக்கினார். ஜி.வி.பிரகாஷ், கௌரி கிஷன் நடித்த இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.

Story image

தற்போது புதிய படம் ஒன்றினை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக். இதற்கு ஹாட் ஸ்பாட் எனப் பெயர்ட்டுள்ளார்கள். இதில் நடிகர்கள் கலையரசன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம் இவர்களுடன் நடிகைகள் கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.

சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வருமென படக்குழு தெரிவித்துள்ளது.

சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குநர், “எனது நாயகிக்கு நன்றி” என பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.