டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தாஜ் மஹாலுக்குச் சென்று காதலர் நாளைக் கொண்டாடிய ரித்திகா!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ரித்திகா தனது கணவருடன் தாஜ் மஹாலுக்குச் சென்று காதலர் நாளைக் கொண்டாடியுள்ளார்.

News image
Updated On :15 செப்டம்பர் 2024, 9:25 am

DIN

பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ரித்திகா தனது கணவருடன் தாஜ் மஹாலுக்குச் சென்று காதலர் நாளைக் கொண்டாடியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா. இவர் பாக்கியலட்சுமி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

Story image

தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரித்திகா, தொடர்களை நடித்தார். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மூலம் பிரபலமடைந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

தொடர்ந்து, வினு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ரித்திகா, திருமணத்துக்குப் பிறகு இவர் நடித்துக்கொண்டிருந்த பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிடும் இவர், தனது கணவருடன் தாஜ் மஹாலுக்குச் சென்று காதலர் நாளைக் கொண்டாடிய புகைப்படங்களை இண்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரித்திகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.