நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கோட் படத்தில் மோகன்லால்? வைரலாகும் புகைப்படங்கள்!

கோட் திரைப்படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image
நடிகர் மோகன்லால் உடன் வெங்கட் பிரபு, பிரேம்ஜி. - படங்கள்: எக்ஸ் / வெங்கட் பிரபு, பிரேம்ஜி.
Updated On :30 ஆகஸ்ட் 2024, 10:54 am

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார்.

கோட் திரைப்படம் 3 மணி நேரம் என தகவல் வெளியாகிய நிலையில் இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணலில் பதிலளித்துள்ளார்.

இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.

கோட் படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லாலை இயக்குநர் வெங்கட் பிரபு சந்தித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

நடிகர் மோகன்லாலுடன் இயக்குநர் வெங்கட் பிரபு.

நடிகர் மோகன்லாலுடன் இயக்குநர் வெங்கட் பிரபு.

இதனால் கோட் படத்தில் மோகன்லாலும் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோட் படத்தின் இறுதிக்கட்ட ஒலிக் கலவைகள் (சவுண்ட் மிக்சிங்) சேர்க்கப்பட்டன. அதே இடத்தில் மோகன்லாலும் அவரது பரோஜ் படத்துக்கான போஸ்ட் புரடக்‌ஷன்ஸ் பணிகளுக்காக வந்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பு சாதரணமாக நடந்ததா அல்லது நன்றி தெரிவிக்க நடைபெற்றதா என படம் வெளியான பிறகே தெரியவரும். ஆனால் பிரேம்ஜி நன்றி தெரிவித்துள்ளதால் சந்தேகம் வலுவடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.