தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆடுஜீவிதம் யாருக்கும் எதிரான படமல்ல... இயக்குநர் விளக்கம்!

ஆடுஜீவிதம் திரைப்படத்தின் சர்ச்சையைக் குறித்து...

News image

இயக்குநர் பிளஸ்சி.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 6:25 am

ஆடுஜீவிதம் திரைப்படத்தின் சர்ச்சைகளைத் தொடர்ந்து இயக்குநர் பிளஸ்ஸி விளக்கமளித்துள்ளார்.

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்த இப்படத்தை பிளஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கியிருந்தார்.

பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகளவில் கவனம்பெற்ற நாவலை நல்ல சினிமாவாகவே மாற்றியிருந்தனர். இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் தொழில்நுட்ப ரீதியாகவும் பல பாராட்டுகளைப் பெற்றது.

குறிப்பாக, ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தின் ஆன்மாகவே பார்க்கப்பட்டது. கேரள அரசின் மாநில விருதுகள் சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்), சிறந்த இயக்குநர் - பிளஸ்ஸிக்கும் கிடைத்தது.

ஆனால், இப்படம் அரேபியர்களைக் கொடூரமானவர்களாக, இரக்கமற்றவர்களாக சித்திரிப்பதாக சௌதி அரேபியாவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அதனால், சௌதியில் இப்படத்தைத் தடை செய்துள்ளனர். அதேநேரம், இப்படத்தின் இறுதியில் நஜீப்பைக் காப்பாற்றும் பணக்கார அரேபியராக நடித்த ஜோர்டான் நடிகர் அகேப் நஜன் படத்தின் கதையை (ஸ்கிரிப்ட்) சரியாக வாசிக்காமல் நடித்துவிட்டதாக, சௌதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து இயக்குநர் பிளஸ்ஸி எக்ஸ் தளத்தில் விளக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆடுஜீவிதம் திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆடுஜீவிதம் நாவலின் சினிமா தழுவல்தான். மனித மனதின் உன்னதமே இப்படத்தில் தீவிரமாக பேசப்பட்டிருக்கிறது. நஜீப் (கதைநாயகன்) வைத்திருந்த கடவுள் நம்பிக்கையால், அக்கடவுள் முதலில் இப்ராஹிம் கத்ரியாகவும் பின் அவனை ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் செல்லும் அரேபியர் வடிவிலும் வருவதையே கூறியிருக்கிறோம்.

நான் படம் முழுவதும் இந்த விசயத்தைக் கடத்தவே முயற்சி செய்திருக்கிறேன். தனிப்பட்ட நபரையோ, இனத்தையோ, நாட்டையோ, நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்படவில்லை.

ஆடுஜீவிதம்.

ஆடுஜீவிதம்.

அரேபியர்கள் இரக்கமும், அனுதாபமும் கொண்டவர்கள் என்பதைக் காட்டவே நஜீப் சாலையை அடைந்ததும் அவனை தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் செல்லும் அரேபியரின் கதாபாத்திரம் வைக்கப்பட்டிருந்தது.

ஆடுஜீவிதம், சினிமா என்னும் கலை வடிவில்தான் பேசப்பட வேண்டும். சிலர் இப்படத்திற்கு தவறான விளக்கத்தை அளித்து வருகின்றனர்.” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.