ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து மோகன்லால் ராஜிநாமா!

கேரள திரையுலகில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2024, 9:48 am

மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜிநாமா செய்துள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதில் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.

நடிகைகள் ரேவதி சம்பத், ஸ்ரீலேகா, மினு முனீர் உள்ளிட்டோர் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேலா பாபு மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்கத்தில் (அம்மா) பொறுப்பு வகித்த பொதுச்செயலர் பதிவியை ராஜிநாமா செய்தார். அதேபோல், இயக்குநர் ரஞ்சித்தும் கலாச்சித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா.

நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா.

இந்த நிலையில், தற்போது அம்மா அமைப்பின் தலைவரான நடிகர் மோகன்லால் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவருடன், நடிகர்கள் சங்கத்தின் பிற பொறுப்பாளர்களும் ராஜிநாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளால் நடிகர் மோகன்லால் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. காரணம், மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லாலுக்கு சித்திக்கின் பாலியல் தொல்லைகள் குறித்து தெரியாமல் இருக்குமா? இது தெரிந்தும் மோகன்லால் ஏன் இவ்வளவு நாள்களாக சித்திக் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இதைப்பற்றி எதுவும் தெரியாது என்றால் சக நடிகைகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்முறைகளைக்கூட அறியாத நடிகர் சங்கத் தலைவராக எதற்காக இருக்கிறார்? என பலரும் கேள்வியெழுப்பி வந்த நிலையில், மோகன்லால் பதவியிலிருந்து விலகியது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.