பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ரஜினி - 171 பெயர் டீசர் படப்பிடிப்பு!

நடிகர் ரஜினி - லோகேஷ் கனகராஜ் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 6:05 am

DIN

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றிப்படமானது.

தற்போது, ஏப்.22ஆம் தேதி ‘தலைவர் 171’ பெயர் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில், ரஜினி - 171 பெயர் டீசர் புரோமோ விடியோவுக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம், லியோ படத்தின் பெயர் அறிவிப்புக்கு புரோமோ விடியோ தயாரித்த லோகேஷ், ரஜினி - 171-ல் என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.