’காந்தாரா 2'-ல் ரஜினி?
காந்தாரா - 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


காந்தாரா - 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
ரூ. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கன்னடத்தில் வெளியான இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்தியா முழுவதும் காந்தாரா படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இதையும் படிக்க: 'சில நொடிகளில் உயிர் தப்பித்தது’: நடிகர் விஷால்
இதனைத் தொடர்ந்து காந்தாரா 2ஆம் பாகம் எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே ப்லிம்ஸ் சமீபத்தில் தெரிவித்த நிலையில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து ரிஷப் ஷெட்டியிடம் ‘காந்தாரா 2-ல் ரஜினி நடிக்கிறாரா? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்தபடியே பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
காந்தாரா படம் வெளியானபோது ரிஷப் ஷெட்டியை அழைத்து ரஜினி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...