நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

News image
கோப்புப்படம்
Updated On :2 பிப்ரவரி 2024, 2:53 am

DIN

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்துக்குப் பிறகு பெரிதாக திரைப்படங்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

அடியே

திட்டம் இரண்டு படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அடியே. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கெளரி கிஷன் நடித்திருக்கிறார்.

மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். 

அடியே திரைப்படம் நாளை (ஆக.25) திரைக்கு வர உள்ளது.

பாட்னர்

நடிகர் ஆதி - ஹான்சிகா நடித்துள்ள திரைப்படம் பாட்னர். இப்படத்தை மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை (ஆக.25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹர்காரா

ராம் அருண் இயக்கி நடித்துள்ள திரைப்படம்  ஹர்காரா. காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை (ஆக.25) திரைக்கு வரவுள்ளது.

கிங் ஆஃப் கோதா

ஜீ ஸ்டுடியோ மற்றும் வே ப்ரேர் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிங் ஆஃப் கோதா'. 

இப்படத்தில் துல்கர் சல்மான், டான்சிங் ரோஸ் சபிர், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார், ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்தப் படம் இன்று(ஆக.24) திரையரங்குகளில் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.